ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேஸ்புக் பதிவுகளுக்கு ஹார்ட்டின் உள்ளிட்ட லைக்குகளை அள்ளி வழங்கவும், அரசாங்கத்துக்கு ஆதரவான முறையில் கருத்துக்களை பதிவிடவும் போலி பேஸ்புக் கணக்குகளை இயக்குவதாக அண்மைக்காலமாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் புது வருடத்தின் பின்னர் ஜனாதிபதி தன் கடமைகளை ஆரம்பித்தது தொடர்பான ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதிவொன்று, குறித்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று உறுதிப்படுத்துகின்றது.
குறித்த பதிவில் ஹார்ட்டின் மற்றும் ஆதரவுக் கருத்துக்களை பகிர்ந்துள்ளவர்கள் பெரும்பாலும் வௌிநாட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் என்பதுடன் ஒருசில சிங்கள, தமிழ், முஸ்லிம் பெயர்களிலும் கூட பேக் ஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.