அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் காண்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.