நாட்டில் எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் மேலும் எண்ணாயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் நிதிஉதவியில் கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த எரிவாயு தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நாட்டில் எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஏப்ரல் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 8 லட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள் , ஹோட்டல்கள் உள்ளிட்ட உள்ளுர் சந்தைகளில் 11 ஆயிரம் மெட்ரிக் டொன் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.