இலங்கை அணியின் முன்னாள் வீரர் தம்மிக பிரசாத் இன்று காலிமுகத்திடலில் 24 மணித்தியால உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்குமாறும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினனால் துயரில் சிக்கியுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் விதத்தில் நான் 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிப்பேன்” என அவர் நேற்று தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்கவேண்டும் என கோரி கடந்தவாரம் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை வரை இடம்பெற்ற பேரணியை தம்மிக பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார்.