இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இந்த கலந்துரையாடலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வொஷிங்டனில் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கான இலங்கையின் உயர்மட்டக் குழுவில், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன், தொழில்நுட்ப நிபுணர் குழுவும் பங்கேற்க உள்ளதாக நிதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.