ஹொரணை, 13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபரொருவர் , ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹிக்கடுவ – வெல்லத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் காலி, ஹல்விடிகல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.