2022 ஒலிவியர் விருதுகளில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தமைக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.
லைஃப் ஆஃப் பை எனும் புக்கர் பரிசு பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டே இந்த நாடகம் படைக்கப்பட்டது.
நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், புலியாக நடித்த ஏழு நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நட்சத்திரமான அபேசேகர, சிறந்த நடிகரை வெல்வதில் தான் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
அவர் தனது சொந்த நாடான இலங்கை பற்றியும் சில வினாடிகள் பேசினார், அதில்
“இப்போது எனது தாய் நாடான இலங்கை கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.நண்பர்களே உங்களை அதிகம் நேசிக்கின்றேன்; உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்; உங்களோடு நானும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.