ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால அரசாங்கம் குறித்து எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவது குறித்த யோசனையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார இந்த விடயம் குறித்து இணக்கப்பாட்டிற்கு வரமுடியவில்லை.எனினும் மீண்டுமொருமுறை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.