நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இவ்வாறு மூடப்படுவதாக மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து மதுபானசாலைகளின் உரிமையாளர்களுக்கும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.