மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மகாசங்கத்தினரை விமர்சிப்பது முற்றிலும் தவறானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
எம்பிலிபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசதலைவர்களை நல்வழிப்படுத்தி ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனை வழங்கும் பொறுப்பு மகாசங்கத்தி னருக்கு உண்டு. நல்ல ஆலோசனைகளை ஆட்சியாளர்கள் கேட்க மறுத்தால் மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு தற்போதைய நிலைமை சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.