ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்கள் அதிகாரம் பெற்ற போதிலும், அவர்களால் அந்த அதிகாரத்தை பாதுகாக்க முடியாது என மால்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நீர்கொழும்பில் ஏனைய மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.