இலங்கை மத்திய வங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே , நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி குறிப்பிட்டார்.
நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, துணைநில் வைப்பு வீதம் 13.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வீதம் 14.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, இந்த இரண்டு வட்டி வீதங்களும் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் வட்டி வீதம் அதிகரிப்பு தொடர்பில் கருத்துரைத்த, கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி, குறித்த நடவடிக்கையானது, நாணய மாற்று விகிதத்தின் நிலைப்படுத்தலுக்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.