தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம் அனுப்பப்படும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தனிமனிதனால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரேடியாக மேல் நோக்கி நகர்த்த முடியாது.கொள்கை மாற்றம் மாத்திரம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது.அரசியல் மற்றும் சமூக நிலையான தன்மை அவசியமாகும்.
தம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை.
ஆனால், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வெளியார் தலையீடு எதுவும் இருக்காது என்ற அடிப்படையின் கீழேயே இந்த பதவியை தாம் ஏற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.