நாடாளுமன்றத்தை இம்மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று (08) பிற்பகல் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு குழு தீர்மானித்துள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்வும் வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.