Date:

இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஸ்டாலின் வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசியுள்ளார், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையின் கிழக்கு,மற்றும் மத்திய மலைநாடு மற்றும் வட மாகாணங்களிலும், கொழும்பு, யாழ்ப்பாணத்திலும் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கத் தயாராக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய இராஜதந்திர தூதரகங்கள் ஊடாக பொருட்களை விநியோகிக்குமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின், மார்ச் 31ஆம் தேதி இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார், மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும், இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழக முதல்வரிடம் தெரிவித்த கவலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...