Date:

ராஜபக்ஷக்கள் விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா் – சஜித் பிரேமதாச

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் சபையில் பகிரங்கமாக அறிவித்தாா்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிருந்து நாட்டை மீட்பதற்கான ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் யோசனைகளை முன்வைத்து, எதிர்க் கட்சி தலைவர் தற்போது சபையில் அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு சாதாரண நிறைவேற்று அதிகாரம் அல்லாமல் சிறப்பு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது. ராஜபக்ஷக்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோா் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...