கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை (05) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக குறித்த இளைஞனை அவரது தாயார் கண்டித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொபைல் கேம் காரணமாக சிறுவன் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் கண்டித்ததால், சிறுவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டான்.
தெல்தெனிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது மரணத்திற்கான காரணம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.