Date:

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று (12) உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த நபரை கொரோனா காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சந்தேக நபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி…

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர்...

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ…

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான...

பழம்பெரும் பாடகி லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொல இன்று (15)...

ஆயுதங்களுடன் ஜிங்கா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன...