நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக பல சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.