நாட்டில் இன்றைய தினம் 6 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய A முதல் F வரையான வலயங்களிலும், G முதல் L வரையான வலயங்களிலும் பகல் வேளைகளில் 4 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், A முதல் F வரையான வலயங்களிலும், G முதல் L வரையான வலயங்களிலும் இரவு வேளைகளில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P முதல் S வரையான வலயங்களிலும், T முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளைகளில் 4 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், P முதல் S வரையான வலயங்களிலும், T முதல் W வரையான வலயங்களிலும் இரவு வேளைகளில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், CC 1 வலயத்தில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.