நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியின் 10 பங்காளிக்கட்சிகள் ஆகியனவற்றின் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கமைய, இன்றைய தினம் அவர்கள் பல விசேட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இன்று கூடியதன் பின்னர், ஏனைய இரண்டு கட்சிகளையும் சந்திக்கவுள்ளனர்.
இதுவரையில் 3 தரப்பினர் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.