Date:

சாய்ந்தமருதில் இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம்

தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்று இரவும் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, பச்சிளம் குழந்தைகளை கொன்ற கோத்தாவே வெளியேறு, மொட்டின் முட்டுக்கள் களருங்கள், அடுத்து நாட்டை விட்டு வெளியேர போவது யார், ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு...

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு...