நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. அதற்காக ஒருவர் வந்தார், ஆனாலும் அடுத்த நாளே போய்விட்டார் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் என்ன நடக்கிறது. திடீரென ஊரடங்கு, சமூக வலைத்தளங்கள் முடக்கம், அவசரகாலச் சட்டம் எல்லாம் எதற்கு, காரணங்களை கூறுங்கள்?அமைதியாக நடக்கும் போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர். யார் இவர்கள் எதற்காக இப்படி வந்தார்கள், இதற்கு ஆளுங்கட்சியினர் பதில் கூற வேண்டும்.
நாட்டில் நிதியமைச்சர் இல்லை. அதற்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சரும் ஒரே நாளில் பதவி விலகிவிட்டார். மேலும் நிதியமைச்சின் செயலாளரும் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். இப்படி சென்றால் நாடு பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது-என்றார்