தற்போதைய அரசில் நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,”நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கின்றனர். இதனை நாம் ஏற்கவேண்டும். அதனால்தான் அமைச்சர்கள் பதவி துறக்கின்றனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனவே, சர்வக்கட்சி அரசு என்ற பொறிமுறையை மக்கள் நம்பமாட்டார்கள். அதனை நிராகரித்துள்ளனர். தற்போது மக்களின் நம்பிக்கைதான் முக்கியம். இந்த ஆட்சி இல்லாவிட்டால், மற்றைய தரப்புக்கு ஆட்சி கையளிக்கப்பட வேண்டும்.” என்றார்.
“இந்த பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் தற்போது தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு வெளியில் சென்று தீர்வை தேட வேண்டும் . அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அவ்வாறு கண்டறியும் தீர்வை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம். அதற்கான யோசனையை முன்வைக்கலாம். அதற்கு மக்கள் ஆணையே சிறந்த வழி. எனவே, மக்களின் விருப்பத்துக்கேற்பவே அரசு அமைக்கப்பட வேண்டும்.” என மேலும் குறிப்பிட்டார்.