இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச தனது உரையில் “எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.”முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்தே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனினும், பகிரங்கமாக பெயரை குறிப்பிடவில்லை.