நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஒரு குழு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துகிறது, அவர்கள் அமைதியாக கலைந்து செல்கிறார்கள், மற்ற குழு வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயங்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.