புதிய நிதியமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பதவி விலகியுள்ளார்.
அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
இதனையடுத்து, முன்னதாக நீதியமைச்சராக பதவி வகித்துவந்த அலி சப்ரி நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பதவி விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.