ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு சுயாதீகமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்றில் எழுந்து நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேலும், அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவை உத்தியோக பூர்வமானது இல்லை எனவும், இதன் ஊடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக செயற்பட்ட, 10 கட்சிகள் சுயாதீனமாக செயற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் செனவிரத்ன, சுசில் பிரேம ஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்சினி பெர்ணான்ட பு ள்ளே, உள்ளிட்டோர் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர்.