நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தீர்மானமிக்க முக்கியமான நாடாளுமன்ற அமர்வு இன்று (05) ஆரம்பமானது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் மக்கள் வீதியில் இறங்கியிருக்கும் தருணத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்திருந்த பல அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளன.
அவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் உள்ளடங்குகின்றன.