Date:

எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லை- ரணில்

ரணில் விக்ரமசிங்க எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது.
தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கிணங்க அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து குழுவொன்று அமைத்து தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளதாகவும் அந்த நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் கிடையாதென்றும் அந்தக் கட்சி அ தெரிவித்தது.
இதேவேளை, கட்சி பேதங்களின்றி தேசிய ஒருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் பாராளுமன்றம் கூட்டப்பட்ட உடனேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...