இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக, முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவார்ட் கப்ரால் விலகியதைத் தொடர்ந்து, குறித்த வெற்றிடத்திற்கு கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.