ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.






