பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்களின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குவை பேச அனுமதிக்க மறுத்ததுடன், அவரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.
போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார்.