அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நேற்றிரவு கூடியிருந்தது.
இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி வெளியேறுவது குறித்து எவ்வித இறுதி தீர்மானங்களும் எட்டப்படவில்லை.
அது தொடர்பில் இன்றைய தினம் மீண்டும் கூடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.