Date:

இன்றைய தினம் 1,515 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் 1,515 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 272,998 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 242,839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், 3,467 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...