Date:

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை மின் துண்டிப்பு குறித்து 12 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கிரிபத்கொடை, கண்டி, பெராதெனிய, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலாலை, சிலாபம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்சாரத் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

மரங்கள் வீழ்வு, மண்மேடு சரிவு போன்ற காரணங்களால்  சில பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, வீடுகளுக்கும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற...

ஜிந்துப்பிட்டியில் ஐந்துபேர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...