மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.
மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேயரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து இன்று மாலை அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.