இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, ‘ஒரே மக்களாக’ ஒன்றிணைந்து சிறந்த தேசத்திற்காக எழுந்து நிற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவில், ஜயசூரிய பொது மக்களை இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியலால் பிரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் துடுப்பாட்ட வீரர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.
அறிக்கை:
கடந்த ஒரு மாதத்தில் நாங்கள் இலங்கையர்கள் ஒன்றாக அமைதியாக துன்பங்களை அனுபவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. நாங்கள் அந்த நிலையை அடைந்துள்ளோம். நேற்றைய போராட்டங்கள் அப்பாவி மக்களின் துன்பம் மற்றும் நியாயமற்ற ஒடுக்குமுறையின் விளைவாகும்.
சாதி மதம், கட்சி அரசியல் என்று பிரிந்து விடாமல், ஒரே மக்களாக ஒன்றிணைவோம், நமக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் நிற்போம். என்று தனது டிவிட்டர் பக்க்தில் பதிவிட்டுள்ளார்.