நுகேகொடை – மிரிஹான பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சாதாரண சட்டத்தை தவிர்ந்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.