Date:

எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு எதிராக மனுத்தாக்கல்

மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு PUCSL உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் செயல்படாமல் உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அரசாங்கத்தினால் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியவில்லை.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு மற்றும் வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...