டீசல் இன்மையால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, குறிப்பாக ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கின்றதென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி கொள்கலன்களை உரிய நேரத்தில் கப்பலேற்றம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.