Date:

புத்தாண்டு காலத்தில் நாடு இருளில்?

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் தடையின்றி கிடைக்காவிடின் புத்தாண்டு காலத்தில் முழு நாடும் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

12 அல்லது 15 மணித்தியாலங்கள் வரை  மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தன்மையே காணப்படுகிறது. 1 மணித்தியால மின்துண்டிப்பை அமுல்படுத்தியிருந்தால் 10 மணித்தியால மின்துண்டிப்பை தற்போது அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தினாலும்,வரட்சியான காலநிலை தொடர்வதாலும் நாளாந்தம் 15 மணித்தியாலங்கள் வரை மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

களனி திஸ்ஸ மின்நிலையத்தின் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாக உள்ளது.

நீர் மின்னுற்பத்தியில் சுமார் 1,200 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்க கூடிய இயலுமை காணப்படுகின்ற போதும் நீர் பற்றாக்குறை காரணாக பகல் வேளைகளில் 300 மெகாவாட் மின்சாரத்தையும், இரவு வேளைகளில் 700 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க முடிகிறது.

எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில் 1,700 மெகாவாட் அளவில் கொள்ளளவு காணப்படுகின்ற போதும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை மாத்திரம் விநியோகிக்க முடிகிறது.

இருப்பினும் இரவு வேளைகளில் மின்பாவனைக்கான கேள்வி 1,800 மெகாவாட் வரை உயர்வடைந்துள்ளது.

களனி திஸ்ஸ மற்றும் கொழும்பு துறைமுக பகுதியை அண்மித்துள்ள மிதக்கும் மின்நிலையங்களுக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருள் 3நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாக உள்ளது.

ஏனைய மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை.ஆகவே தற்போது அமுலில் உள்ள 10 மணித்தியால மின்விநியோக துண்டிப்பை 12 அல்லது 15 மணித்தியாலங்கள் வரையாவது இனி நீடிக்க வேண்டும்.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பனவில் தாமதம் ஏற்படுமாயின் புத்தாண்டு காலத்தில் முழு நாடும் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

நீர் மின்னுற்பத்திக்கு தேவையான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் வரை தேசிய மின்விநியோக கட்டமைப்பு பல சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும்.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வரட்சியான காலநிலை ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு நாளாந்தம் 1 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்தோம்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தூரநோக்கமற்ற வகையில் 1 மணித்தியால மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கவில்லை.

தற்போது 10 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...