நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக மின்சார சபை தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.