எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுபாடு தொடரும் எனவும் இதனால் மக்களை பொறுமையாக செயற்படுமாறும் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுபாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 4 ஆம் திகதி எரிபொருள் இறக்குமதிக்கான கால அட்டவணை இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும் அதனைத் தொடர்ந்து நாட்டிற்கு எரிபொருள் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவிக்கு அமைவாக இவ்வாறு நாட்டிற்கு எரிபொருள் கொள்வனவு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.