Date:

எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணை?

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1, 200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்கமுடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1, 700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்றபோதிலும், எரிபொருள் இன்மையால், 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.

ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1, 800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது.

எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை.

தாங்கள் அறிந்த வகையில், இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் 10 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த நிலையில், வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங்களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும்.

எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.

விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக, மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...