அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்களுக்கு, விசேட தரத்திற்கான பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.