நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இன்று இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
கொழும்பு சேதவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, வாத்துவ – மொரந்துடு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.