ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பேரிச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியை 1 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் இன முரண்பாடுகளைத் தூண்டும் ஒரு சூழ்ச்சி என மக்கள் உரிமைகள் பாதுகாப்புக்கான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தினால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், இனவாதத்தை தூண்டும் முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதாக மக்கள் உரிமைகள் பாதுகாப் புக்கான அறக்கட்டளையின் தலைவரான அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தடை செய்யப்பட்ட பட்டியலில் பேரிச்சம் பழம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் முஸ்லிம் சமூகம் மத்தியில் ஒரு சம்பியனாக இருக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிர்வாகம் சமூகங்களைப் பிரித்து அதிகாரத்தைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.