ரயில் போக்குவரத்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் ரயில் போக்குவரத்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொலைதூர ரயில் மார்க்கங்களை உள்ளடக்கி ரயில்வே திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கட்டண திருத்த பட்டியலை இரத்துச் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.