Date:

ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் அதிகாரிகளுக்கு முன்னோடி NVQ மற்றும் Skills Passport நிகழ்ச்சிகளை வழங்குகிறது

இலங்கையின் முதலாவது தேசிய திறன் கடவுச்சீட்டு (NSP) மற்றும் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) ஆகியவற்றை கள உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் Hayleys பெருந்தோட்ட நிறுவனமானது மனித வள மேம்பாட்டிற்கான புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

நிலையான பெருந்தோட்ட வியாபார செயற்பாடுகள் தொடர்பான அவர்களது திறமைகளை மேம்படுத்தும் வகையில், Kelani Valley Plantations PLC (KVPL), Talawakelle Tea Estates PLC (TTEL) மற்றும் Horana Plantations PLC (HPL) ஆகியவற்றின் 70 கள அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட, Hayleys Plantations முகாமைத்துவப் பணிப்பாளர், கலாநிதி Roshan Rajadurai கருத்து தெரிவிக்கையில், “Hayleys Plantationsஇல் எங்களது பணியானது, தோட்ட நிர்வாகத்தில் ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்துவதாகும், அனுபவ அடிப்படையிலான அறிவை மேம்பட்ட தொழில்நுட்ப அறிவுடன் இணைப்பதாகும்.

“NVQ மற்றும் Skills Passport அறிமுகத்துடன், துடிப்பான, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக, எங்கள் குழுவின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் உயர்த்துவதற்கு நாங்கள் உதவுகிறோம். இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவு செய்ததற்காக குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்கள் நாட்டின் முன்னணி தோட்டத்துறை அதிகாரிகளாக வளர்ச்சியடைவதையும், அவர்களின் தொழில்சார் வளர்ச்சியைத் தொடர்வதையும், களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன்.” என தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்கள் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) – கொழும்பு அலுவலகம், தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (NAITA) மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) ஆகியவற்றுக்கு இடையேயான நான்கு தரப்பு முன்முயற்சியாகும். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையம் (NAITA) வழங்கும் தொழில்நுட்ப ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு வருட அனுபவம் மற்றும் பாராட்டத்தக்க செயல்திறன் பதிவுகளுடன் Hayleys பெருந்தோட்டத்திலுள்ள களப் பணியாளர்கள் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அம்சங்களில் NAITAஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியை முடித்தவுடன், கள அலுவலர்களின் முதல் தொகுதி NVQ சான்றிதழ்கள் மற்றும் QR குறியீட்டைக் கொண்ட டிஜிட்டல் திறன்கள் பாஸ்போர்ட் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது, இது அவர்களின் திறன்கள் கோப்புறைக்கு (Portfolio) வசதியான ஒன்லைன் அணுகலை எளிதாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373